ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

14.விரலாண் குறி நோய்.

விரலாண் குறி நோய் தோன்றினால் 
  • ஆண்குறியில் விரலைப் போலவும்,
  • புல்லாங்குழலைப் போலவும் தடித்து வீங்கிக் காணும்.
  • மேலும் உடல் வேதனையுரும்.அழல்(சூடு )மீறி (அதிகரித்து) வெள்ளை காணும்.
  • உடலும் இரணம் போலாகும். 
இதற்கு மருந்து :              சாதிலிங்க பதங்கம்

சுத்தி செய்த சாதிலிங்கம்                        35 கிராம்  (1 பலம் ),

சுத்தி செய்த வெள்வங்கம்                      35 கிராம்  (1 பலம் ),

சுத்தி செய்த பறங்கிப் பட்டை                70 கிராம்  (2 பலம் ),

சாதிலிங்கம்,வெள்வங்கம் இவைகளை தேன் விட்டு அரைத்து கொள்ளவும்.பின்னர் பறங்கிப் பட்டையை பொடி செய்து சட்டியிலிட்டு அதன் மீது முன் மருந்தை வைத்து மேல் சட்டிக் கொண்டு பொருந்த மூடி வாய்ப் பாகத்தை சீலை மண் செய்து தீ எரிக்கவும். ஆறிய பின்பு சீலை மண்ணைப் பிரித்து எடுத்து பார்த்தால் மேல்சட்டியில் பதங்கம் பிடித்து இருக்கும்.இதை பத்திர படுத்திக் கொள்ளவும்.இதை தேன்,நெய்,வெண்ணெய்,முதலிய அனு பானங்களில் உண்டு வந்தால் தடிப்பு,வீக்கம்,சரும நோய்,அழல்,சூலை,புண்,புரைகள்,போன்றவை நீங்க பெற்று முன் நோயும் தீரும். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக