வெள்ளி, 25 ஏப்ரல், 2014

12.பிடக ஆண்குறி நோய்

பிடக ஆண்குறி நோய் ஏற்பட்டால் உழுந்து போலவும்,பயறு போலவும்,அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும்.மேலும் ஆண்குறியை சுற்றி நமைச்சல் ஏற்படும்.சன்னியும் வியர்வையும் ஏற்படும்.

இதற்கு மருந்து கற்பூர பதங்கம் :

பச்சை கற்பூரம்                                    3 பலம் (105 gm )
சுத்தி செய்த கந்தகம்                         2 பலம் (70 gm )
சுத்தி செய்த ரசம்                                2 பலம் (70 gm )
வெள்ளை பாஷாணம்                     1 பலம்   (35 gm )

ரசம்,கெந்தகம் முதலில் நன்கு கருப்பாகும் படி நன்கு அரைத்து,பின்பு வெள்ளை பாஷாணம் சேர்த்து அரைத்து ,பின் பச்சை கற்பூரம் சேர்த்து அரைத்து  பின்பு வெற்றிலை சாறு விட்டு மெழுகு பதம் அரைத்து கொடிவேலி வேர் பட்டையை தண்ணீர் விட்டு நன்றாய் அரைத்து குகை செய்து,அதனுள் முன்பு அரைத்த மருந்தை வைக்கவும்,இக் குகையை ஒரு சட்டிக்குள் வைத்து மேல்சட்டி வைத்து மூடி சீலை மண் 7 செய்து நான்கு சாமம் (12 மணி )தீயை சிறிது சிறிதாக கூட்டி எரிக்கவும்.பின்பு குளிர ஆறியபின் திறந்து பார்த்தல் மேல் சட்டியில் பதங்கம் ஏறி இருக்கும் இதை எடுத்து பசுவின் நெய்யில் கலந்து புண்ணில் தடவவும்.உள்ளுக்கு கொடிவேலி கலந்த மருந்தை சாப்பிட நோய் தீரும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக